திருச்சி மாநகராட்சியில் நாளை (02.11.2019 ம் தேதி) மருத்துவ முகாம்

0
Full Page

திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் எதிர்வரும் 02.11.2019 ம் தேதி, சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
1. ஸ்ரீரங்கம் கோட்டம் 6 வது வார்டு மாநகராட்சி பாரதியார் ஆரம்பப்பள்ளி, கீழகொண்டயம்பேட்டை, வார்டு எண்.16 கீர்த்தனா கல்யாண மண்டபம், பீரங்கிகுளம்.
2. அரியமங்கலம் கோட்டம் 21 வது வார்டு ராமசாமி தேவர் மருந்தகம், வரகனேரி, வார்டு எண்.28 மாநகராட்சி பள்ளி காமராஜ் நகர், அரியமங்கலம்.
3. பொன்மலை கோட்டம், 36வது வார்டு, சத்துணவு மையம் காமன்மேடை, கொட்டப்பட்டு.
4. கோ.அபிசேகபுரம் கோட்டம், 56 வது வார்டு சத்துணவு மையம் வடவூர் தில்லைநகர், வார்டு எண்.40 மாநகராட்சி பள்ளி எடமலைப்பட்டிபுதூர்.

Half page

இம்முகாமில் குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் சிகிச்சை, சித்த மருத்துவம், இ.சி.ஜி., பல் சிகிச்சை, இரத்த அழுத்தம் மற்றும் எடை பரிசோதனை என ஒவ்வொரு பிரிவிலும் துறை வல்லுநர்களை கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.