திருச்சியில் தேசிய ஒற்றுமை தின நாள் உறுதிமொழி

0
full

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளையொட்டி அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் ஆட்சியர் .சிவராசு. தலைமையில் நேற்று அனைத்துத்துறை அலுவலர்களும் தேசிய ஒற்றுமை தின நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.

ukr

சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற  உறுதி  அளிக்கிறேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

poster

இந்நிகழ்ச்சியில்; மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விவசாயம் சாந்தி சமூகபாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசுப்ரமணியபிள்ளை தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.