திருச்சியில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு ரூ.1,25000/- அபராதம்

0
D1

ஸ்ரீரங்கம் கோட்டம் 8வதுவார்டு மூவேந்தர் நகர் பகுதியில்  வீடுகளில் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் இணைந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் கொசுப்புழு ஒழிக்கும் பணி, புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருவதை  மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன் ஆய்வு செய்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.

நல்ல தண்ணீரை திறந்த நிலையில் சேமித்து வைக்க வேண்டாம் எனவும், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இவற்றை கடைபிடிக்காத இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நல்ல தண்ணீர் கீழே கொட்டப்படுவதுடன், பாத்திரங்களும் பறிமுதல் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகர மக்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

N2

மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற கொசு உற்பத்தி ஆதாரங்களை உடனடியாக தாமாக அகற்றிக்கொள்ள வேண்டும். அகற்றாதபட்சத்தில் அபராதம் விதிக்கபடுவதுடன் குடிநீர் இணைப்பு துண்டிக்க நேரிடும் என்றார்.

D2

அக்டோபர் மாதத்தில் ரூ.1,25000/- அபராதம் வசூலிக்கப்பட்டது

இந்தஆய்வில் நகரப்பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர் சிவபாதம், உதவிஆணையர் வைத்தியநாதன் உள்ளனர்.

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.