கொசுக்கள் இல்லாத இல்லம் நோய்கள் அற்ற இல்லம்

0
D1

கொசுக்கள் இல்லாத இல்லம்
நோய்கள் அற்ற இல்லம்

N2

பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் கொசுக்கள் இல்லாத இல்லம் ,நோய்கள் அற்ற இல்லம் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பூச்சி தடுப்பு துறை பொது சுகாதாரம் சார்பில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கொசுக்கள் இல்லாத இல்லம் நோய்கள் அற்ற இல்லம் விழிப்புணர்வினை மாநகராட்சி பணியாளர்கள் செய்து வருகிறார்கள். வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் கொசு புழுக்கள் நீர் உள்ள சூழலில் வளரும். பூந்தொட்டி ,தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், டயர்கள் உள்ளிட்டவற்றில் தேங்கும் நல்ல நீரினால் ஏடிஸ் வகை கொசுக்கள் முட்டை, லார்வா ,பியூபா, கொசுவாகி டெங்கு காய்ச்சலை பரப்புகின்றது. அதனால் மாணவர்கள் வீட்டைச்சுற்றி உள்ள தேங்காய் சிரட்டை ,நீர் தேங்க கூடியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சூழ்நிலையை வீடுகளிலோ கட்டிட வளாகத்தில் வைத்து இருந்தால் அதற்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் மாநகராட்சி பணியாளர்கள் எடுத்துக் கூறினார்கள்.
மழை பெய்த போது உருவாகும் தொட்டிகளில் உள்ள நீரில் அபேட் மருந்து தெளிப்பதால் கொசு உற்பத்தியை தடுக்க இயலும். பூந்தொட்டி, பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் மண்ணை அள்ளிப்போட்டு சரி செய்வதால் நீர் தேங்குவதை தடுக்கலாம் என்றனர். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பட் தாஸ் தலைமை தாங்கினார் .அமிர்தம் சமூகசேவை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

N3

Leave A Reply

Your email address will not be published.