வேலைவாய்ப்பு செய்திகள்…

0
Business trichy

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமையுடைய தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  30

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

loan point

பணி: உதவியாளர்

nammalvar

காலியிடங்கள்: 176

சம்பளம்: மாதம் ரூ.18,800 – 56,500

சங்கம்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை- 1

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 57

சம்பளம்: மாதம் 13,000 – 45,460

சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை – 4

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 58

சம்பளம்: மாதம் ரூ.15,000 – 62,000

சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை-18

பணி: இளநிலை உதவியாளர்

web designer

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800

சங்கம்: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம். சென்னை – 10

பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

சங்கம்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை – 93

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி:  ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ இமையதளத்தில் உள்ள “SBI Collect” என்ற சேவையைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான வசதி மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tncoopsrb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2019

IAS academy

Leave A Reply

Your email address will not be published.