புளியஞ்சோலை ஆற்றில் 4 ஏரிகள் நிரம்பி வழிகின்றன

0
Business trichy

புளியஞ்சோலை ஆற்றில் தொடர் மழை காரணமாக 4 ஏரிகள் நிரம்பி வழிந்து வருகின்றன.

துறையூரை அடுத்து அமைந்துள்ள புளியஞ்சோலை ஆற்றில் தொடர் மழை காரணமாக அதன் அருகில் இருக்கும் ஜம்பேரி, ஆலத்துடையன்பட்டி பெரிய ஏரி, சின்ன ஏரி, சிறுநாவலூர் ஏரி ஆகிய நான்கு ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

. தற்போது சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விவசாய பணியை ஆரம்பித்து உள்ளனர். கிணற்று பகுதியும் நிரம்பி உள்ளதால் கிணற்றுப் பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி உள்ளனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.