திருச்சி மாவட்டத்தில் மூடப்படாத போர்வெல் குழாய்கள்

0
1 full

முசிறி தாலுகாவில் மூடப்படாமல் உள்ள போர்வெல்களை மூடுவதற்கு ஒன்றிய நிர்வாகம் மூழுவீச்சில் செயல்படவேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கைவிடப்பட்ட போர்வெல் குழியில் சுஜித் என்ற 2 வயது சிறுவன் விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கைவிடப்பட்ட போர்வெல்களை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டனர். இதையடுத்து முசிறி ஒன்றியத்தில் கோட்டாத்தூர்-12, புலிவலம்-6, சுக்காம்பட்டி-9, மூவானூர்-6, டி.புதுப்பட்டி-3, கோமங்கலம்-6, பேரூர்-13, அய்யம்பாளையம்-6, வெள்ளூர்-6 உள்பட 26 ஊராட்சிகளில் மொத்தம் 100 போர்வெல்கள் மூடப்பட்டுள்ளது. இதில் 7 போர்வெல்கள் மழைநீர் சேகரிப்பு குழாயாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் மூடப்படாத போர்வெல்கள் உள்ளது. அதனை மூடவேண்டுமென சமூக ஆர்வலர்கள் திருச்சி கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.