திருச்சி அருகே காணாமல் போன கொத்தனார் கொள்ளிடம் ஆற்றில் பிணமாக மீட்பு

0
D1

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிலையாத்தி குடித்தெருவை ஹரிஹரன் (வயது 22). கொத்தனாரான கடந்த 28-ந் தேதி மதியம் வீட்டில் இருந்து கிளம்பிய அவர் இரவு வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாய் செல்வி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று ஹரிஹரனை தேடினார். அவர் எங்கும் செல்லவில்லை. 3 நாட்கள் ஆகியும்  வீடு திரும்பாததால் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு நேற்று வாத்தலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ஹரிஹரனை போலீசார் தேடி வந்தனர்.

N2

இந்நிலையில் துடையூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் பழைய மணல் குவாரி அருகே ஆண் ஒருவரது பிணம் தண்ணீரில் மிதப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்  உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

D2

விசாரணையில் அவர் தான் காணாமல் போன செந்தில் என்று தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.