திருச்சியில் காதல் ஜோடியை மிரட்டிய போதை வாலிபர்கள் காதலன் மாயம்

0
Full Page

திருச்சியில் காதல் ஜோடியை மிரட்டிய போதை வாலிபர்கள் கைது 
காதலன் மாயம்

ஜீவித்
ஜீவித்

 

திருச்சி சமயபுரம் நெ 1. டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் பேசிக் கொண்டிருந்த திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் ஜீவித்(20), அண்ணா பல்கலைக்கழகத்தில் EEE மூன்றாம் ஆண்டு படித்து வருக்கிறார். இவர் திருச்சி காவேரி கல்லூரியில் எம் ஏ முதலாமாண்டு படிக்கும் துறையூர் அருகே புலிவலம் பகுதியைச் சேர்ந்த பிரியா(20) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் காதலர்கள்.

Half page

நேற்று கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் அடியில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மண்ணச்சநல்லூர் அருகே தேவி மங்கலத்தைச் சேர்ந்த ராமர் மகன் கலையரசன்(22),மற்றும் கோகுலன்(23) மனக்காடு லால்குடி ஆகியோர் காதல் ஜோடியை மிரட்டியுள்ளனர். பின்னர் காதலியிடம் தவறாக நடக்க முயன்றதால் காதலியை ஓடி விடும்படி காதலன் விரட்டி உள்ளார். பின்னர் போதையில் இருந்த வாலிபர்கள் சுஜீத்தை மிரட்டி தாக்க தொடங்கினர். இருவருக்கும் கைகலப்பானதில் போதை வாலிபர்கள் சுஜீத்தை கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் 5000 கன அடிக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் நீரின் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டு காதலன் சுஜீத் மூழ்கி மாயமானார்.

காதலி கொள்ளிடம் காவல் நிலையத்தில் கொடுத்த தகவல் அடிப்படையில் கோகுல்,கலையரசன் இருவரையும் கொள்ளிடம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதலன் சுஜீத்தை ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் இரவானதால் மீட்பு பணியை கை விட்டுச் சென்றனர். மேலும் இவ்வழக்கை காவல் உதவியாளர் அகிலா விசாரணை செய்து வருகிறார்.

மேலும் திருச்சியில் தனிமையில் நின்றுகொண்டிருந்த காதலர்களிடம் போதைக் கும்பல் தனது போக்கிரி தனத்தை  காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.