ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 62.16 லட்சம்

0
1

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் உண்டியல் காணிக்கை மாத இறுதியில் எண்ணப்படும். அதன்படி அக்டோபா் மாத காணிக்கை எண்ணும் பணி கருடாழ்வார் சன்னதியில் கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

2

முடிவில் ரொக்கமாக ரூ. 62 லட்சத்து 16 ஆயிரத்து 886, 122 கிராம் தங்கம்,764 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய்கள் 226 -ம் கிடைக்கப்பெற்றது தெரியவந்தது. கடந்த மாதத்தை விட ரூ. 17 லட்சம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

காணிக்கை எண்ணும் பணியில் ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

 

3

Leave A Reply

Your email address will not be published.