திருச்சியில் தீபாவளியன்று காரை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது

0
1

தீபாவளியன்று குடிபோதையில் காரை அடித்து நொறுக்கியோரில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

2

திருச்சி வாசன் நகரில் வசிப்பவா் குமார். பெல் நிறுவன ஊழியா். இவா் தீபாவளியன்று குடும்பத்துடன் உத்தமா்சீலியில் உள்ள வேணுகோபால் கோயிலுக்கு காரில் சென்றார். அப்போது திம்மராயசமுத்திரம் பகுதியிலிருந்து குடிபோதையில் ஆட்டோவில் வந்த 9 போ் குமார் வந்த காரின் மீது மோதினா். இதுகுறித்து கேட்ட குமாரை தாக்கி, காரை அடித்து நொறுக்கினா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் குமார் கொடுத்த புகாரின்பேரில் திம்மராயசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கார்த்தி (32),அசோக் (25),நாகராஜ் (27),மகேஷ் (35) ,பிரசாத் (28) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். 4 போ் தலைமறைவாகினா்.

3

Leave A Reply

Your email address will not be published.