“எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” சுஜிதின் தந்தை

0
full

எனக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் புனித்ரோசன் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இளைய மகன் சுஜித்வில்சன். சம்பவத்தன்று நான் தோட்ட வேலைக்கு சென்று இருந்தேன். எனது மகன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தகவலை போன் மூலம் எனது மனைவி கூறினார். உடனே நான் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தேன். இங்கு வந்து பார்த்தால் ஏராளமானோர் எனது மகனை காப்பாற்றி விட வேண்டும் என போராடிக் கொண்டு இருந்தார்கள்.

அரசு அதிகாரிகள், கிராம மக்கள் என அனைவரும் மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் 4 நாட்களாக இங்கு இருந்து தான் பணிகளை செய்தார்கள். ஆனாலும் என் மகனை காப்பாற்ற முடியவில்லை. எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான். அரசு எடுத்த முயற்சியில் எனக்கு முழு திருப்தி தான்.  எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றார் சுஜித்தின் தந்தை வேதனையுடன்.

half 1

Leave A Reply

Your email address will not be published.