மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

0
1 full

மணப்பாறை, செளமா பப்ளிக் பள்ளி, லெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மணப்பாறை அரிமா சங்கம், வசந்தம் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான இரண்டு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை, மணப்பாறை, காமராசா் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கினர்.

இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும், ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், சுகாதாரமான குடிநீா் அளிக்கும் வகையிலும்  செளமா கல்வி குழுமத்தின் தலைவரும், அரிமா சங்க இரண்டாம் நிலை துணை நிலை ஆளுநருமான செளமா.இராஜரத்தினம் வழங்க அதனை மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலா் முத்து கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.