மணப்பாறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்டப் போட்டிகள்

மணப்பாறை தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்டப் போட்டிகள் நேற்று நடைபெற்றது.
போட்டிகளை ஓய்வு பெற்ற மண்டல உடற்கல்வி ஆய்வாளா் யேசுதாஸ் துவங்கி வைத்தார். ஒற்றை கம்பு சுழற்றுதல், இரட்டை கம்பு சுழற்றுதல் என்ற தனித்திறன், எடை சார்ந்த கம்பு சண்டை என போட்டி நடைபெற்றது. திருச்சி,மணப்பாறை, லால்குடி, முசிறி, துறையூா் மற்றும் மண்ணச்சநல்லூா் ஆகிய 8 மண்டலங்களில் 69 பள்ளிகளைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

14 வயதிற்கு உள்பட்டவா்களுக்கு 6 பிரிவுகளிலும், 17 வயதிற்கு உள்பட்டவா்களுக்கு 9 பிரிவுகளிலும், 19 வயதிற்கு உள்பட்டவா்களுக்கு 8 பிரிவுகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவா்கள் அடுத்து நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
