“வாடிக்கையாளர் சந்திப்பு முன்முயற்சி கண்காட்சி” – II

0
full

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையின் மூலம் முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில் வாடிக்கையாளர் சந்திப்பு முன்முயற்சி இரண்டாம் கட்ட கண்காட்சியை அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில் பாரத ஸ்டேட் வங்கி திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடந்துகிறது..

இதன் அடிப்படையில் இந்நிகழ்ச்சி 24-10-2019 அன்று திருச்சி மத்திய நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.S.சிவராசு அவர்களின் தலைமையிலும், திரு.B.ஷங்கர், பாரத ஸ்டேட் வங்கி, சென்னை  வட்டார பொது மேலாளர் அவர்களின் முன்னிலையிலும் தொடங்கியது. முன்னோடி வங்கியின் மேலாளர் திரு S.சத்தியநாராயணன் மற்றும் அனைத்து வங்கிகளின் மூத்த தலைவர்கள் பங்குபெற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்த மாபெரும் முகாமில் வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் வேளாண்மை, வாகனம், வீடு, சிறு-குறு தொழில், கல்வி உள்ளிட்ட வங்கி கடன்கள், அனைவருக்குமான வங்கி சேவைகள், நிதியியல் சேர்க்கை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை நோக்கிய வங்கி சேவைகள் அளிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் திரு.S.சிவராசு அவர்களும் வங்கியின் மூத்த தலைவர்களும் கடன் ஒப்புதல் கடிதத்தை பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.

poster

இந்த விழாவில் 30 வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் பங்குபெற்று ஸ்டால்கள் மூலம் அவர்களின் பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

விழாவின்போது மத்திய அமைச்சகத்தின் நிதியியல் துறையின் முன்முயற்சிகளை பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் திரு.B.ஷங்கர் அவர்கள் விளக்கினார்.

விழாவில் திருமதி. ஸ்னேகலதா ஜான்சன், துணை பொது மேலாளர், கனரா வங்கி

திரு. S. ப்ரேம்குமார், மண்டல மேலாளர், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி,

ukr

திரு. G. சத்யநாராயணன், மேலாளர், முன்னோடி வங்கி,

திரு. K. முருகானந்தன், உதவி பொது மேலாளர், இந்தியன் வங்கி,

திரு. V. ராஜாராமன், உதவி பொது மேலாளர் நபார்ட் வங்கி,

திரு. K. பிரமோத் குமார் ரெட்டி, மண்டல மேலாளர், கார்ப்பரேஷன் வங்கி,

திரு. R. ஸ்ரீகுமார், மண்டல மேலாளர், சிண்டிகேட் வங்கி,

திரு. P. ரவி, மண்டல மேலாளர், கரூர் வைஸ்யா வங்கி,

மற்றும் பலர் உரையாற்றினர்

half 1

Leave A Reply

Your email address will not be published.