லால்குடி அருகே வீட்டின் பூட்டை  உடைத்து திருட முயன்ற சிறுவர்கள்

0
D1

லால்குடி அருகே வெள்ளனூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பெரியசாமி  நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புகையில். வீட்டின் உள்ளே ஆட்கள் இருப்பதை கண்டு கூச்சலிட்டார். இதையடுத்து வீட்டினுள் இருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஒருவரை மடக்கி பிடித்தனர். தகவலறிந்து வந்த லால்குடி போலீசார் சென்ற போலீசார் பிடிபட்ட சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

N2

விசாரணையில், அந்த சிறுவன் லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பதும், தப்பியோடிய மற்றொரு சிறுவன் திருவாருர் மொகந்தனூர் பகுதியை சேர்ந்த வெற்றி (எ) லெட்சுமணன்(15) என்பதும் தெரியவந்தது.

N3

Leave A Reply

Your email address will not be published.