லால்குடி அருகே அரசு பஸ் டிரைவர் திடீர் மரணம்

0
Full Page

லால்குடியை அடுத்த பூவாளூரைச் சேர்ந்தவர் திருக்குமரன் (வயது 47). அரசு பஸ் டிரைவர்.. நேற்று மதியம் வழக்கம்போல் திருக்குமரன் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

Half page

லால்குடியை அடுத்த மாந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற அவர், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு திண்ணியம் வரை செல்லும் பஸ்சை  இயக்கி உள்ளார். பின்னர் திண்ணியத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, திருச்சி நோக்கி அந்த பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் சில பயணிகள் இருந்தனர். லால்குடியை அடுத்த சிறுமயங்குடியை தாண்டி பஸ் சென்றபோது திருக்குமரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு, கண்டக்டரிடம்என்னால் பஸ்சை இயக்க முடியவில்லை, நெஞ்சுவலி மற்றும் தலை சுற்றல் என்றார்.

உடனே கண்டக்டர் நாகராஜ்  அவருக்கு சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அளித்து, பின்னர் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.