மாணவர்களின் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் :  சப்-கலெக்டர் சிபி ஆதித்தியா

0
1 full

பள்ளி மாணவ மாணவியரிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க மாவட்ட மைய நூலகத்தில் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிபி ஆதித்தியா  செந்தில்குமார் தலைமையில் நடந்தது.

இதற்காக மைய நூலகத்தில் புத்தக திறனாய்வு நிகழ்ச்சி பிரதி மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்கள் இதில் கலந்து கொண்டு எனக்குப்பிடித்த நூல், நூலில் கூறப்பட்ட கருத்துக்களை விளக்கும் நாடகம், மற்றும் ஓவியம், போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

இறுதியில் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிபி ஆதித்தியா  செந்தில்குமார்  தனது உரையில், எதிர்காலத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற வாசிப்பினை மேம்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட இதை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.