பூட்டியே கிடக்கும் கால்நடை மருந்தகம்

0
gif 1

ஸ்ரீரங்கத்தில் வடக்கு வாசலில் இயங்கி வந்த கால்நடை மருந்தகம் நீண்ட நாட்களாக மூடியே கிடக்கிறது.

தற்போது மழைகாலம் ஆதலால் கால்நடைகளுக்கு எளிதில் தொற்று நோய் பரவும் சூழலில் மருந்தகம் பூட்டிக்கிடப்பதை எண்ணி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

gif 4

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தேவையான பசும்பால் இப்பகுதியிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவினால் அது பால் உற்பத்தியை பாதிக்கும்.

gif 3

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது விரைவில் திறக்கப்படும் என்றனர். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலை நீடித்தால் தொற்றுநோயால் பல கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்படும் என பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.