திருச்சியில் தீபாவளி தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கின.

0
D1

திருச்சியில் தீபாவளி தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கின.

 

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, கேரளா உள் ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 27-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண் டாடப்படுவதை யொட்டி, திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படு கிறது.

 

 

 

இதனால், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகர போலீசார் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தனர். இந்த தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. அங்கிருந்து வெளிமாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அனைத்தும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து புறப்பட்டு சென்றன.

 

D2
N2

தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை

 

இதில் தஞ்சாவூர் வழித் தடத்தில் செல்லும் பஸ்கள் திருச்சி சோனா மீனா தியேட் டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன்பிருந்து இயக்கப் பட்டன. புதுக்கோட்டை மற்றும் மதுரை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அனைத்தும் மன்னார்புரம் ரவுண்டானா வில் இருந்து இயக்கப்பட்டன. தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும். மன்னார் புரம் தற்காலிக பஸ் நிலையத் திற்கு பயணிகள் சென்றுவரும் வகையில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இதர வழித்தடங்களுக்கு செல்லும் பஸ்கள் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம் போல திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்தே புறப் பட்டு சென்றன. வருகிற 30-ந் தேதிவரை இந்த தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும். தற்காலிக பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாத வகையில் போலீ சார் பாதுகாப்பில் ஈடுபட்டுள் ளனர். திருச்சி மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக்கழிப்பிட வசதி, ஒலி பெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன.

N3

Leave A Reply

Your email address will not be published.