‘தேசப்பற்று’பேச்சுப்போட்டி இந்தி, ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி இருபாலர் பங்கேற்க நேரு யுவகேந்திரா அழைப்பு !

0
1

‘தேசப்பற்று’பேச்சுப்போட்டி இந்தி, ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி இருபாலர் பங்கேற்க நேரு யுவகேந்திரா அழைப்பு

 

 

இந்தியாவின் 2020ம் ஆண்டின் குடியரசு தின கொண்டாட்டத்தில் இளையோர்களை அதிகளவில் பங்கு பெறச் செய்யும் விதமாக தேசம் முழுவதும் நேரு யுவகேந்திரா சார்பில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இளையோர்களிடையே, தேச பகத்தி உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை உருவாக்குவது, சிறந்த தகவல் தொடர்பு திறனைக் கண்டறிவது மற்றும் அரசு நலத்திட்டங்களை இளையோர் அறிந்து கொள்ளச்செய்வதுமே இதன் முக்கிய நோக்கம்.

 

இந்நிகழ்ச்சி வரும் 29ம் தேதி காலை 9 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் நடைபெற உள்ளது. தேசப்பற்று மற்றும் தேசக்கட்டுமானம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடக்கிறது. கால அளவு 10 நிமிடங்கள். 1.4.2019 அன்று 18 வயது முதல் 29 வயது வரையில் உள்ள இருபாலரும் கலந்து கொள்ளலாம். ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும். முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

 

2

மாநில போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடம் பிடிப்போருக்கு முறையே ரூ.25,000, ரூ.10,000, ரூ.5,000 ரொக்கப்பரிசு சான்று வழங்கப்படும். மாநில போட்டியில் வெற்றி பெறுவோர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். தேசிய போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்கள் பிடிப்போருக்கு முறையே ரூ.2,00,000, ரூ.1,00,000, ரூ.50,000 ரொக்கப்பரிசு சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் 28ம் தேதிக்குள் ‘மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர், நேரு யுவகேந்திரா, ரேஸ் கோர்ஸ் சாலை, காஜமலை, திருச்சி-23 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு 0431-2421240, 9443687794, 9486753795 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் தெரிவித்துள்ளார்

3

Leave A Reply

Your email address will not be published.