தொழில்நுட்ப கோளாறால் திருச்சியில் இருந்து புறப்பட்ட மலேசிய விமானம் ரத்து

0
Business trichy

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

web designer

இந்நிலையில்தினமும் காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு 8.55 மணிக்கு திருச்சியில் ஏர் ஏசியா விமானம் வந்து தரையிறங்கும். பின்னர் இங்கிருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு கோலாலம்பூர் நோக்கி செல்லும். நேற்று காலை இந்த விமானம் வழக்கம்போல் 8.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு, மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட இருந்த வேளையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.  பழுதான விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.

இருப்பினும் தொழில்நுட்ப கோளாரை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருச்சிக்கு வரும் மற்றொரு ஏர் ஏசியா விமானத்தில் 87 பயணிகளும் கோலாலம்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானமானது, சரிசெய்யப்பட்டு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் மலேசியா புறப்பட்டுச் சென்றது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.