திருச்சி மாவட்டத்தில் அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணி

0

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணியில் ஒரு பகுதியாக பஞ்சப்பூர் முதல் துவாக்குடி வரையிலான சாலைப்பணியில் தற்போது புதுக்கோட்டை சாலை முதல் துவாக்குடி வரையிலான 12.70 கி.மீ தூரப்பணிகள் ரூ.122.20 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.  இதில் ஏற்கனவே முடிக்கப்பட்ட 8 கி.மீ. பணியைத் தொடர்ந்து தற்போது மீதமுள்ள 4.70கி.மீ. பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதகை ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் இடங்களில் ஒரு இரயில்வே மேம்பாலம், ஒரு மேம்பாலம், ஒரு பெரிய பாலம், 6 சிறு பாலம், 12 தண்ணீர் செல்வதற்கான சிறு பாலம், 10 குழாய் பாலம் போன்ற பாலங்கள் சாலை அமைக்கும் இடங்களில் அமைய உள்ளது.  சாலை அமைக்கும்  பணிகள் கடந்த (12.09.2019) முதல் நடைபெற்று வருகிறது.   தரமான சாலை, விரைவாக முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இப்பணி வரும் 2020 ஜனவரி மாதத்தில் போக்குவரத்து தொடங்கும் வகையில் முடிக்கப்படும்.  ஜீயபுரம் திண்டுக்கரை  – பஞ்சப்பூர் வரையிலான 18 கி.மீ. சாலையில் தாயனூர், புங்கனூர் பகுதிகளில் 5.5 கி.மீ சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதற்கான பணிகளை முடிக்க 18 மாதங்கள் ஆகும் என மாவட்ட ஆட்சியர்   தெரிவித்தார்.

ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப மேலாளர்.யோகேஸ், கனிமவளத்துறை உதவி இயக்குநர் அண்ணாதுரை, ஒப்பந்ததாரர் தேவேந்திரன் உடன் இருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.