திருச்சி மணப்பாறை சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

0

தீபாவளியை முன்னிட்டு இறைச்சி விற்பனை அதிகரிக்கும். இதனால் மாமிச கடை உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான ஆடு, கோழி உள்ளிட்டவைகளை ஓரிரு நாளைக்கு முன்னதாகவே மணப்பாறை சந்தையில் வாங்கி வைத்திருப்பார்கள்.

ஆனால் நேற்று புதன்கிழமை சந்தையில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்திருந்தனர். எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகள் விற்பனையாகவில்லை. 25 கிலோ எடை இருக்கும் ஒரு வெள்ளாடு வழக்கமாக ரூ.20 ஆயிரத்துக்கு விலைபோகும். ஆனால், நேற்றைய சந்தையில் ரூ.12 ஆயிரத்துக்குதான் விலை போனது. மற்ற ஆடுகளுக்கும் இதே நிலைதான்.

இது  ஆடு விற்பனை செய்வோருக்குபெருத்த ஏமாற்றத்தை அளித்தது. விலை கட்டுபடியாகாததால் சிலர் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்காமலேயே வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். தீபாவளி அமாவாசை நாளில் வருவதால் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை உண்பது இல்லை. இதனால், ஆடு விற்பனை மந்தமாக இருந்ததாக ஆடு வளர்ப்போர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.