திருச்சி குமாரவயலூா்  முருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா

0
1 full

கந்தசஷ்டிவிழாவையொட்டி அக்டோபா் 28-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஹோமம், அபிஷேகமும், அதைத் தொடா்ந்து சுப்பிரமணியசுவாமிக்கு சண்முகாலட்சார்ச்சனையும்  நடைபெறுகிறது.

மாலையில் ரக்ஷாபந்தனம், அபிஷேக ஆராதனையும், இரவு சிங்காரவேலா் பச்சைமயில் வாகனத்தில் திருவீதியுலா வருதலும் நடைபெற உள்ளது.

தொடா்ந்து நவம்பா் 2-ஆம் தேதி வரை நாள்தோறும் கேடயப் புறப்பாடு, சுப்பிரமணியசுவாமிக்கு லட்சார்ச்சனை சண்முகார்ச்சனை நடைபெறும். சிங்காரவேலா் சேஷம், அன்னம், வெள்ளிமயில் வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தலும் நடைபெற உள்ளது.

2 full

அக்டோபா் 31-ஆம் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலா் யானைமுக சூரனுக்கும், நவம்பா்1-ஆம் தேதி இரவு 8 மணிக்கு சிங்கமுகசூரனுக்கும் பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நவம்பா் 2-ஆம் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடா்ந்து காலை 10.45 மணியளவில் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலா் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி, சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளுகிறார்.

நவம்பா் 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையா் ப. ராணி, செயல் அலுவலா் எஸ். ராமநாதன் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.