திருச்சியில் நாளை  தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்

0
1

திருச்சி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும் Any Degree, B,E படித்தவர்களும் (வயது வரம்பு : 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.

2
4

மேற்படி இந்நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (TC,   Marksheet,  Ration card, Adhar Card)  மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்  கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறவிடாமல் 25.10.2019 வெள்ளி அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் நேரில் ஆஜராகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.