திருச்சியில்  சமூக நலத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தினவிழா     

0
Business trichy

திருச்சி  மாவட்டத்தில்  சமூக நலத்துறையின் மூலம் சர்வதேச முதியோர் தினவிழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 22ம் தேதி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில்  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் 90 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை கௌரவித்து முதியோர் இல்லங்களுக்கு வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கியும், நலிவுற்ற முதியோர்களுக்கு புடவைகள் வழங்கியும், கோலப்போட்டி, இசைநாற்காலி போட்டி, பாட்டுப்போட்டி, ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

சர்வதேச முதியோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  முதியோர்களை நாம் முறையாக பராமரிக்க வேண்டும்.  முதியோர்களுக்கு தேவையான வசதிகளை முதியோர்களின் குழந்தைகள் செய்து கொடுக்க வேண்டும். தமிழக அரசு முதியோர்களின் நலனே நாட்டு நலன் என்ற நோக்கத்தில் நிதி உதவி வழங்கி வருகிறது.  நிதியுதவி பெற்று தொண்டு நிறுவனங்கள் முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது.

Image
Rashinee album

நமது மாவட்டத்தில் 24 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டம் 2007 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  அதன்படி பெற்றோர்களின் மகன், மகள், வாரிசுகள், பெற்றோர்களின் மூத்த குடிமக்களையும் பாதுகாப்பது அவர்களது வாரிசுகளின் அடிப்படை கடமையாகும்.   சரியான முறையில் பெற்றோர்களை வாரிசுகள் பராமரிக்கவில்லை எனில் சட்டத்தின் மூலம் வாரிசுகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிவகை செய்கிறது.

பெற்றோர்கள் தான் பெற்றெடுத்த பிள்ளைகளை எவ்வளவு பரிவோடும், பாசத்தோடும், பராமரித்து பாதுகாத்து வளர்த்து நல்ல குடிமக்களாக வளர்த்தார்களோ அதே வகையில் அப்பெற்றோர்களை பராமரித்து பாதுகாப்பது பி;ள்ளைகளின் கடமையாகும்.

இளைய தலைமுறைகள் பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும்.  முந்தைய காலங்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை கலாச்சாரம் கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களின் சிறப்பான பட்டறிவுகளை பெற்று இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ வழிவகுக்கும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.அ.தமீமுன்னிசா, சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் இரா.ராஜவேல்(துறையூர்) மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன், மாவட்ட முதியோர் நலக்குழு உறுப்பினர் கி.திருமலைராஜ், மாவட்ட பெண்கள் மேம்பாட்டு திட்டகுழு உறுப்பினர் சகுந்தலா சீனிவாசன் மற்றும் முதியோர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.