திருச்சியில் வனத்துறையால் முடக்கப்பட்ட 5 அடி சாலை அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

0
Full Page

திருச்சியில் முடக்கப்பட்ட 5 அடி  சாலை
அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்.

திருச்சி மாவட்டத்தில்  வனத்துறையினரால் சாலை பராமரிப்பு பணி பாதியிலேயே முடக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பேருந்துகள் உட்பட பொதுக்கள் அவதிக்குள்ளாவதாக அப்பகுதிமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Half page

செட்டிகுளத்திலிருந்து எதுமலை வரை சுமார் 13 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பெரகம்பி முதல் எதுமலை வரை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது, இதனிடையில் 3 கிலோமீட்டர் தூரம் வனத்துறைக்கு சொந்தமான நிலம் எனக்கூறி சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் செல்லும் சாலையை அரசு உத்தரவுப்படி 5 மீட்டர் அகலம் கொண்ட சாலையை விரிவாக்கம் செய்ய அரசு உத்தரவு அளித்தும் சாலை விரிவாக்க பணி எதுவும் நடைபெறாமல் உள்ளது. இந்நிலைமை கடந்த 6 மாதகாலமாக அப்படியே இருந்து வருகிறது. மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து எதுமலை,பெரகம்பி வழியாக தனியார் பேருந்து ஒன்று பெரம்பலூர் வரை தினமும் 6 முறை செல்கிறது. மேலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை வழியாக பெரகம்பி வரை 2 அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பள்ளி கல்லூரி பேருந்துகளும் சென்று வருகின்றன. தற்போது வனத்துறையினரால் முடக்கப்பட்ட சாலை பராமரிப்பு பணியினால் 3 கிலோமீட்டர் வரை வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். ஒரு சிலர் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்குள்ளாவதும் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.