கல்வி உதவித் தொகை அக்டோபர் 31க்குள் விண்ணப்பம் !

0
Business trichy

கல்வி உதவித் தொகை அக்டோபர் 31க்குள் விண்ணப்பம் !

 

web designer

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவி தொகைக்கு, 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு, மத்திய – மாநில அரசுகள், பல்வேறு கல்வி உதவி தொகை திட்டங்களை அறிவித்துள்ளன. அவற்றில், மத்திய அரசு திட்டங்களுக்கு மட்டும், தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்; மாநில திட்டங்களுக்கு, பள்ளிகளில் தனித்தனியாக, விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் புதிய கல்வி உதவித் தொகை பெறவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உதவி தொகைக்கு கால நீட்டிப்பு செய்யவும், தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில், பதிவு செய்ய வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கிய பதிவு பணி, 31ம் தேதி முடிகிறது. எனவே, அவகாசம் முடியும் முன், https://scholarships.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் பதிவு செய்யுமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.