திருச்சியில் சீனி மிட்டாய் தாத்தாவும் சிறுவர்களும்

0
full

சீனி மிட்டாய் தாத்தாவும் சிறுவர்களும்

வீட்டிலுள்ள சிறுவர்களை வீதிக்கு சுட்டி இழுக்கும் ஜல் ஜல் சத்தமும் பீப்பீ சத்தமும் அரைச்சட்டை வேஷ்டியுடன் வெறும் காலில் நடந்துவரும் ராமையாவை நோக்கித்தான். தோளில் துண்டு, துண்டின் மேல் ஐந்தடி மூங்கில், மூங்கில் மேல் அழகிய பொம்மை, பொம்மைக்கு அலங்கார ஆபரணங்கள், கூலிங் கிளாஸ், பொம்மையின்
கையில் ஜால்ரா, கீழ் சீனி மிட்டாய், மற்றொரு கையில் பீப்பி ஊதிக்கொண்டு ராமையா வரும்போது குழந்தைகள் குதூகலமிடுக்கின்றன.

ukr

குழந்தைகள் கேட்டதெல்லாம் கொடுப்பவராக இருக்கிறார் ராமையா. மயில், குயில், ரயில், வாத்து ,கொக்கு, கோழி, குருவி, நெக்லஸ், வளையல், மீசை முளைக்காத சிறுவர்களுக்கு மீசை என சிறுவர்கள் என்ன கேட்கிறார்களோ தத்துரூபமாக சீனி மிட்டாயில் செய்து வாரி வழங்குகிறார்.
பாரம்பரியமாக சீனிமிட்டாய் இருந்தாலும் நவநாகரீக உலகில் மறைந்து வருகிறது.
இதுகுறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் ரமையாவுடன் பேசுகையில்,
மதுரை தத்தநேரி செல்லூரை பூர்வீகமாக கொண்டவர்கள் நாங்கள். எனக்கு ஒரு மகள் ,ஒரு மகன் உள்ளார்கள். நான் மூன்று தலைமுறையாக சீனி மிட்டாய் தொழிலை செய்து வருகிறேன்.

poster

17 வயதில் தொடங்கிய தொழில் இன்றுவரை தொடர்கிறது என்றார். தாத்தா சுக்கு தேவன், அப்பா பின்ன தேவன், தற்பொழுது நான் எனக்கூறும் ராமையா சீனி மிட்டாய் தயாரிப்பு பற்றி கூறுகையில் , ஒரு நாளைக்கு மூன்று கிலோ சீனிமிட்டாய் தயாரிப்பேன் .இது முழுக்க முழுக்க சர்க்கரை மற்றும் எலுமிச்சம் பழச்சாறு மட்டும்தான். இந்த மிட்டாய் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ சக்கரைக்கு அரை எலுமிச்சை பழம் சாறும், சம பங்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கிண்டி கொண்டே இருக்கையில், பக்குவமாய் பாகு வருகையில் எடுத்து தயார் செய்வேன்.
3 கிலோ மிட்டாய் விற்பதற்கு 30 கிலோ மீட்டர் நடந்தே செல்வேன் என்றார். திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மதுரை , தூத்துக்குடி என எங்கு திருவிழா என்றாலும் அங்கு சீனி மிட்டாய் விற்க சென்றுவிடுவேன். இத்தொழில் குழந்தைகளுக்கு குதூகலம் அளித்தாலும் குடும்பம் நடத்துவதற்கு இந்த சம்பாத்தியம் பத்தாது என்றார். இத்தொழிலுக்கு வங்கியில் கடன் உதவியும் கிடைப்பதில்லை. ஆனால் மூன்று தலைமுறையாக இத்தொழிலை செய்து வருகிறோம் என்றார். சாலையில் சென்ற பெரியோர்கள் அந்த காலத்தில் சாப்பிட்ட மிட்டாய் இந்த காலத்தில் கிடைக்கிறது என ஆனந்தம் பொங்க வாயில் சீனிமிட்டாய் சுவைத்தபடியே சென்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.