கொணலை கிராம ஏரியில் சட்ரஸ்’(வழி) அமைக்க கலெக்டரிடம் மனு

0
gif 1

கொணலை கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. ஏரிக்கு கிழக்கு, வடக்கு பகுதியில் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். சமீபகாலமாக போதிய மழை இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அவ்வப்போது பெய்யும் மழைநீர் ஏரியின் வடக்குப்புறத்தில் உள்ள சண்முகா நதி மற்றும் சின்னாறு மூலமாக உப்பாற்றில் கலக்கிறது. எனவே, இந்த இரு ஆறுகளும் இணையும் இடத்தில் தடுப்பணை கட்டி, ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தி 1,500 அடி வெட்டு வாய்க்கால் மூலமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியின் வடக்கு கரைவரை கொணலை ஏரி பாசன விவசாயிகள் நலச்சங்கம் மூலமாக கொண்டு வந்து உள்ளோம். எனவே, மழைநீர் ஏரிக்கு வரும் பொருட்டு 10 அடி அகலம், 15 அடி உயரம் அளவு கொண்ட ‘சட்ரஸ்’(வழி) அமைக்க போதிய நிதி உதவி அளிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம் என்று அந்த மனுவில் கொணலை கிராம மக்கள் குறிப்பிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.