மாவட்ட மைய நூலகத்தில்”படிப்புதவித் தொகை”திட்ட தேர்விற்கான பயிற்சி வகுப்புகள்

மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை” திட்ட தேர்விற்கான கையேடுகளை தலைமையாசிரியர்களுக்கு வழங்கினார்.:

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை” திட்ட தேர்விற்கான பயிற்சி வகுப்பு 07.09.2019 முதல் ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் மேற்கண்ட தேர்வினை எழுதி வெற்றிப்பெற்றால் 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒரு வருடத்திற்கு ரூ.12000 வீதம் மத்திய அரசு உதவி தொகை வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கலந்துகொண்டு மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அவரது உரையில், மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஏற்ற தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றும் , தாழ்வுமனப்பான்மையை அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.
அவரது உரையில் பெற்றோர்களுக்கு உதவிகரமாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும்; போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும்போது தோல்வியைப் பற்றி கவலைப்படகூடாது என்றும் , ஒரு மனிதனுக்கு தோல்வி ஏற்படும் போது தான் அவனுக்கு வெற்றி அருகில் வரும் எனவே, தோல்வியை கண்டு துவண்டுவிடாமல், தோல்விக்கான காரணத்தை அறிந்து அதனை சரிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாணவ,மாணவிகள்; தங்களுக்கு பிடித்த துறையை தோந்தெடுத்து படிக்க வேண்டும். பெற்றோர்கள் திணிப்பதாலோ, மற்றவர்கள் நிர்பந்தத்தாலோ தங்களுக்கு விருப்பமில்லாத துறையை தேர்ந்தெடுத்து படிக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.
மேலும் மைய நூலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றும் நமது மாவட்டத்திலிருந்து அதிக மாணவ மாணவியர்கள் இத்தேர்வில் தகுதிபெற்று உதவித்தொகையை பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை” திட்ட தேர்விற்கான கையேடுகளை பள்ளி தலைமையாசிரியர் திரு.கே.எஸ்.ஜீவானந்தன் அவர்களிடம் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் வரவேற்றுப்பேசினார். திருச்சிராப்பள்ளி நகர வட்டார கல்வி அலுவலர் திருமதி.ஜெயலெட்சுமி,மணிகண்டம் வட்டாரகல்வி அலுவலர் மருதநாயகம், ஆகியோர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனர், ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிவகுமார் முதல்வர் (பணி நிறைவு) மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற எவ்வாறு படிக்க வேண்டும் என்று கூறினார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தலைவர் கவிஞர்.வீ.கோவிந்தசாமி மற்றும் துணைத்தலைவர்கள் இல.கணேசன் என்.நன்;மாறன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
