மணப்பாறை அருகே, மயில்களை வேட்டையாடிய, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது – துப்பாக்கி பறிமுதல்

0
Full Page

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன. நேற்று முன்தினம் புதுப்பட்டி அருகே ஒருவர் மயில்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதாக திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிற்கு தகவல் கிடைத்தது.

Half page

தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மணப்பாறை வன அலுவலர் மாதேஷ்வரன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மயில்களை வேட்டையாடிய நபரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் புதுப்பட்டியை சேர்ந்த தங்கராசு(வயது 42)என்றும் அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், தற்போது துவரங்குறிச்சியில் உள்ள வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். என்றும் தெரியவந்தது.

அவர், மயில்களை பி.பி.எல். என்ற வகையை சேர்ந்த துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும் தெரியவர அவரை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த வனத்துறையினர், அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் இறந்த நிலையில் 2 மயில்களை பறிமுதல் செய்தனர்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.