திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல்

0
full

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதை பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக கோட்ட வாரியாக சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் காவல் / வணிகவரித்துறை அலுவலர்கள் கொண்ட சிறப்பு குழு அமைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆணையிட்டுள்ளார்

இதன்படி திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து புகார் தெரிவிக்க திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக 0431-2415734 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து புகார் தெரிவிக்க ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் அலுவலக 0431-2690603 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்..

poster
ukr

இலால்குடி கோட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து புகார் தெரிவிக்க இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக 0431-2541500 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்..

முசிறி கோட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து புகார் தெரிவிக்க முசிறி சார் ஆட்சியர் அலுவலக 04332-260335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்..

புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என  அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..

half 1

Leave A Reply

Your email address will not be published.