திருச்சி விமான நிலையத்தில் ரூ.4½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

0
1

நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 

அப்போது அரியலூரை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 22) தனது கைப்பையில் கனடா டாலர்கள், சுவிட்சர்லாந்து பிரான்க், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை மறைத்து எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது.

 

2

அவற்றின் இந்திய மதிப்பு ரூ.4½ லட்சம்,. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.