ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

0
D1

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 2019-2020 ஆம் ஆண்டிற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளான வாலிபால், கோ-கோ, நீச்சல் மற்றும் தடகளப் போட்டிகள் 25.10.2019 அன்று திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

குழு போட்டிகள் (ஆண்கள் / பெண்கள்):    

வாலிபால், கோ-கோ தடகளம்  (ஆண்கள் / பெண்கள்)  : 100மீ, 400மீ, 1500மீ, குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல்,

D2

நீச்சல் (ஆண்கள் / பெண்கள்):     

N2

50மீ, 100மீ, 200மீ, 400மீ ப்ரீ ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக், 50மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டர்ப்பிளை ஸ்ட்ரோக் மற்றும் 200மீ இன்டிஜுவல் மிட்லெ

போட்டி விதிமுறைகள்:

  • இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நுழைவுபடிவத்தை 25.10.2019 அன்று காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
  • இப்போட்டிகளில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது.
  • தனிநபர் போட்டிகளில் ஒரு நபர் இரு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
  • குழு போட்டிகளில் ஒரு நபர் ஒரு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
  • வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண். 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  என திருச்சி மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.