அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020

0
Full Page

1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்துக் குறள் மலையை உருவாக்க, குறள் மலைச் சங்கமும்,   ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியும்  இணைந்து நடத்தும் மாபெரும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு.

Half page

 மாநாடு நடைபெறும் நாள் :

 மார்கழி 20 & 21-தி.பி.2050; 3.1. 2020 & 4.1. 2020.

மாநாடு நடைபெறும் இடம் : வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு.

 மாநாடு முடிந்தவுடன் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை குரல் மலையைப் பார்வையிட அனைவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

 மாநாட்டின் நோக்கம்:

 திருக்குறள் வேறு தமிழ் வேறு அல்ல. திருக்குறளைப் போற்றுவதும் தமிழைப் போற்றும் ஒன்றுதான். அந்தவகையில் உலகத்தின் பொது மறையாகத் திகழும் திருக்குறளைத் தற்போது மலையிலே பதித்து குறள் மலையை உருவாக்குவதற்கும், திருக்குறள் யுனெசுகோவால் உலக நூல் அங்கீகாரம் பெற்று, அதன் பிறகு உலக நூலாக மலையிலே எழுதுவதற்கும், நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

உலக நூல் என்ற அங்கீகாரம் பெறப்பட்டு விட்டால் அதன் மகத்துவமே தனியாக உலகத்தோர் அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும். ஆகவே திருக்குறளை உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி, இந்தத்  தொடர் மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் ஏறத்தாழ 11 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் சிறப்பான திருக்குறளின் மேன்மையைப் போற்றும் திருக்குறளின் ஆய்வுகளையும் கோட்பாடுகளையும் கூறும் ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட இருக்கிறது.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இந்த ஆய்வு நூலை வெளியிட, யுனசுகோவின் இயக்குநர் அதைப் பெற்றுக் கொள்கிறார்.

மேலும் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கலந்து கொள்ளக்கூடிய ஒரு மாநாடாக இந்த மாநாடு அமைய இருக்கிறது.

குறிப்பாக ஆத்திரேலியா, தென்மார்க்கு முதலான நாடுகள் தங்கள் அரசுச் செலவிலேயே, அந்த நாட்டு  மொழி இயல் வல்லுநர்களை அனுப்பி வைக்க இருக்கிறது. அனைத்து ஐரோப்பிய நாடுகள், கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் பெருவாரியான மொழியியல் வல்லுநர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

 இதை வாசிக்கும் ஒவ்வொரு தமிழர்களும் தமிழ்ப் பற்று கொண்டவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஆய்வுக் கட்டுரைகளை ஐப்பசி 29, தி.பி.2050 / நவம்பர் 15, 2019ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும். விவரங்களை வலைத்தளத்தில் அல்லது பின்னுள்ள அழைப்பிதழில் காண்க!

Quarter page

Leave A Reply

Your email address will not be published.