வெளிநாடு செல்ல விரும்புவோர் கவனத்திற்கு….

0
Full Page

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளில் பணிபுரிய செல்ல விரும்புவோர்கள்  அரசு பதிவு பெற்ற முகவர்கள் மூலம் சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் வேலைக்கான விசாவுடன் வெளிநாடு செல்ல வேண்டும். வெளிநாடு செல்லும் முன் அந்த நாட்டு சட்டத் திட்டங்கள் குறித்தான விவரங்களை அறிந்திருத்தல் வேண்டும். ஒப்பந்த காலத்தில் பணிபுரியும் நிறுவனம் / முகவர் தவிர வேறு நிறுவனம் / முகவரிடம் வேலைக்குச் செல்வதில் உள்ள வரையறைகளை அறிந்திருக்க வேண்டும். வேலைக்குச் செல்பவரின் உரிமைகள், பொறுப்புகள், ஊதியம், வேலையின் தன்மை போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்கான ஒப்பந்தம் மற்றும் அதன் நகலினை எப்பொழுதும் கைவசம் வைத்திருத்தல் வேண்டும்.

Half page

அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கைவசம் வைத்திருத்தல் வேண்டும். வெளநாடுகளில் பணிபுரியும் நபர்கள் அந்நாட்டில் பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக இந்தியத் தூதரகத்தை அணுக வேண்டும். வெளிநாட்டில் பணிபுரியும் இடங்களிலிருந்து நாடு திரும்பிட “வெளிச்செல் விசா” (Exit Permit) பெறுதல் வேண்டும்.

மேலும், தங்களது குடும்பத்திலிருந்து எவரேனும் வெளிநாடு செல்லும் நேர்வில் அந்நபர் குறித்தான பாஸ்போர்ட் உட்பட அனைத்து ஆவணங்களின் நகல்களை குடும்பத்தினர் வைத்துக் கொள்ள வேண்டும். இந்நேர்வில் தேவைப்படும் கூடுதல் தகவல்களை www.emigrate.gov.in, https://portal2.madad.gov.in என்ற இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.  மேலும் தகவலுக்கு வருவாய்த்துறை, 5, மோதிலால், செல்: 9659476742 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.