திருச்சி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

0

திருச்சிமாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் குடிமராமத்து பணி போர்க்கால அடிப்படையில் 16 பணிகள் ரூ.77.31 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவது மாவட்ட ஆட்சியரால்ஆய்வு செய்யப்பட்டது.

கீழ்க்கண்ட பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், தொட்டியபட்டி கிராமத்தில்ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.1.45 இலட்சம் மதிப்பீட்டில் ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த மழை நீர் சேகரித்து வருவதையும், குடிமராமத்து திட்டத்தின்கீழ்  ரூ.0.96 இலட்சம் மதிப்பீட்டில் ரெட்டியபட்டியில் வெள்ள ஊரணி குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதையும் ரூ.4.80 இலட்சம் மதிப்பீட்டில் தொட்டியபட்டியில் புதுக்குளம் தூர்;வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் வி.இடையப்பட்டி ஊராட்சி கோவில்பட்டியில் நாடாக்குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் காஞ்சிரான் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் அரசவந்தன் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் அமணக்கம்பட்டி ஊராட்சியில் பூச்சிக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் தாதனூர் ஊராட்சி வீரசமுத்திர குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில்  ஆமணக்கம்பட்டி ஊராட்சியில் பெரியகுளம்  தூர்வாரும்  பணி நடைபெற்று வருவதையும் ரூ.4.80 இலட்சம் மதிப்பீட்டில் காஞ்சிரான் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் திரிநெல்லிபட்டி ஊராட்சியில் உள்ள வீரப்பநாயக்கர் குளம்  தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பாநாயக்கர் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் திருநெல்லிக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ரூ.4.80 இலட்சம் மதிப்பீட்டில் வகுத்தாழ்வார் பட்டி ஊராட்சியில் உள்ள புதுக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ரூ.2.17 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் திருநெல்லிபட்டி ஊராட்சியில் பெருவாரியான மரக்கன்று நடுதலையும், பொட்டான்குளம் வாரியில் ரூ.1.83 இலட்சம் மதிப்பீட்டில் (புயடிழைn ஊhநஉமனயஅ) தடுப்பணை அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பணிகள் அனைத்தும் தரமானதாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் எனவும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் வி.இடையப்பட்டி கிராமத்தில் சுகாதார துறையின் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு  தீவிரபடுத்தப்பட்டு,பொது மக்களிடம் வீடுகளின் சுற்றுப்புறங்களில் தேங்காய் மட்டை, பழையடயர், பிளாஸ்ட்டிக்கப், பிளாஸ்ட்டிக்பை, தேங்காய்ஓடு, போன்றவற்றை போடாமலும் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகமலும் இருக்க ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்டஆட்சியருடன் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசபெருமாள், கிஷன்சிங், ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.