திருச்சியில் களை இழந்த அ.தி.மு.க. 48-ம் ஆண்டு தொடக்க விழா

0
Business trichy

1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சியை தொடங்கினார். அந்த வகையில் அக்கட்சி தொடங்கப்பட்டு நேற்றுடன் 47 ஆண்டுகள் முடிவடைந்து 48-ம் ஆண்டு தொடங்கி உள்ளது.

அ.தி.மு.க. 48-ம்ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

அ.தி.மு.க. 48-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அ.தி.மு.க. மாநகர் மாவட்ட துணை செயலாளர் அருள் ஜோதி, வக்கீல் அணி மாநில துணை செயலாளர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்தனர்.

loan point
web designer

பொதுவாக அ.தி.மு.க. ஆண்டு விழா எல்லா ஆண்டுகளும் தடபுடலாக கொண்டாடப்படுவது வழக்கம். எம்.ஜி.ஆர். சிலையை சுற்றி அ.தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

nammalvar

ஆனால் நேற்று எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஒரு கொடியை கூட காணமுடியவில்லை. தொண்டர்கள் கூட்டமும் அதிக அளவில் இல்லை. இதனால் விழா களை இழந்த நிலையில் காணப்பட்டது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. மூத்த தொண்டர்களில் சிலர் வேதனையுடன் கூறும்போது, அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த கால கட்டங்களில் கூட இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை.

திருச்சியை சேர்ந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடைத்தேர்தல் பணிக்காக சென்றிருந்தாலும் கொடி தோரணம் கட்ட கூடவா முடியாமல் போய்விட்டது. எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியின் நிலைமை இப்படி ஆகலாமா?’ என்றனர்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.