கைவிடப்பட்ட நிலையில்,  காவல்துறையினரால் மீட்கப்பட்ட பெண் குழந்தை பற்றிய அறிவிப்பு

0
Business trichy

படத்தில் காணும் பெண் குழந்தை, திருச்சி மாவட்டத்திலுள்ள மணச்சநல்லூர் புள்ளம்பாடி வாய்க்கால் படித்துறை அருகே கைவிடப்பட்ட நிலையில், காவல்துறையினரால் மீட்கப்பட்ட பெண் குழந்தை.

மணச்சநல்லூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சைல்டுலைன் உதவியோடு  108 ஆம்புலன்ஸ்  மூலமாக, மகாத்மாகாந்தி  நினைவு அரசு பொது மருத்துவமனையில், 19.07.2019  அன்று தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு,  பெண் குழந்தைக்கு பிரதிக்ஷா என பெயரிடப்பட்டு, 27.08.2019  அன்று  திருச்சிராப்பள்ளி, மாவட்ட சமூகநல அலுவலரின் உத்தரவின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு, தற்காலிக வைப்பு ஆணை (Legally Free for Adoption)பெறப்பட்டு, கோயம்புத்தூர்  சரணாலயம் சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் , சரணாலயம்  சிறப்பு தத்துவள மையத்தில் உள்ள பெண் குழந்தை . பிரதிக்ஷா- வின் புகைப்படம்

loan point

nammalvar

இவ்வறிவிப்பினை காண்பவர்கள் இக்குழந்தையை பற்றிய விபரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால்  இருபத்தொரு நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி, குழந்தைகள் நலக் குழு அல்லது  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலும் அவ்வாறு தகவல் தெரிவிக்காவிடில் இக்குழந்தையை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று (Legally Free for Adoption) வழங்கப்படும் என்பதை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தலைவர் / உறுப்பினர்கள்

குழந்தைகள் நலக்குழு,

மெக்டொனால்டு ரோடு,

web designer

கலையரங்கம் திருமண மண்டபம் மாடியில்,

கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி.

தொ.எண்: 04312413819 / 9629929412.

மற்றும்

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,

N.E.1,மெக்டொனால்டு ரோடு,

கலையரங்கம் திருமண மண்டபம் மாடியில், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி.

தொ.எண்: 0431-2413055ஃ 9047283819

மின்னஞ்சல்: dcpstrichy1@gmail.com

IAS academy

Leave A Reply

Your email address will not be published.