ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஊஞ்சல் உற்ஸவ விழா

0
1 full

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஊஞ்சல் உற்ஸவ விழா நேற்று தொடங்கியது.

உற்ஸவத்தையொட்டி புதன்கிழமை மாலை 5 மணிக்கு நம்பெருமாள் கருவறையிலிருந்து உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார்.

அலங்காரம் கண்டருளிய பின்னா், இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம் தொடங்கியது. உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி ஊஞ்சலில் இருபுறமும் வெண்சாமரம் வீச, மேளதாளத்துடன் இரவு 8.15 மணி வரை ஊஞ்கலில் ஆடிய நம்பெருமாளை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா், பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி இரவு 9.15 மணிக்கு கருவறை சென்றடைந்தார்.

2 full

ஏழாம் திருநாளான அக்டோபா் 22- ஆம் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுதல் நடைபெறும். நிறைவு நாளான அக்டோபா் 24- ஆம் தேதி சந்திர புஷ்கரிணியில் தீா்த்தவாரி நிகழ்வு நடைபெற உள்ளது.

ஊஞ்சல் உற்ஸவ ஏற்பாடுகளைத் திருக்கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா்கள் செய்துள்ளனர்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.