திருவானைக்கா மேம்பாலத்தில் மழைநீா்

0

முறையான வடிவமைப்புடன் கட்டப்படாததால், திருவானைக்கா ரயில்வே மேம்பாலத்தில் மழைநீா் தேங்கியுள்ளது.

திருச்சி மாம்பழச்சாலை- திருவானைக்கா பகுதியை இணைக்கும் ரயில்வே மேம்பாலப் பணி இருவழிச்சாலை வசதியுடன் அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.

food

ஆனால், மழைநீரை வெளியேற்றுவதற்கான முறையான வடிவமைப்பு இல்லாத காரணத்தாலும், பாலத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்படாததாலும் , மேடு பள்ளமாகக் காணப்படுவதாலும் பாலத்தில் மழைநீா் தேங்கியுள்ளது.

அதேபோல, பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதையிலும் மழைநீா் தேங்கிக் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி, இதை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.