திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் புதுமைதினம்

திருச்சியின் ஹோலிகிராஸ் கல்லூரியின், “நிறுவன புதுமை கண்டுபிடிப்பு சபை “(Institution Innovation Council) , இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் புதுமைதினத்தை 2019 அக்டோபர் 15 அன்று நடத்தியது.
பள்ளி மாணவர்களுக்கான விவாதம் (ஆங்கிலம், தமிழ்),கட்டுரைஎழுதுதல் (ஆங்கிலம், தமிழ்), வடிவமைப்பு சிந்தனை மற்றும் ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை கல்லூரி நடத்தியது. திருச்சியைச் சுற்றியுள்ள 14 வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 149 மாணவர்கள் இந்த நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்று தங்கள் புதுமையான திறன்களை வெளிப்படுத்தினர்

. இந்நிகழ்ச்சியை ஹோலிகிராஸ் கல்லூரியின் முதல்வர் முனைவர் .அருட்சகோதரி. கிறிஸ்டினா பிரிட்ஜெட் துவக்கிவைத்தார். நிறுவன புதுமை கண்டுபிடிப்பு சபையின் தலைவர் டாக்டர் கிரெசெண்டா ஷகிலா மோத்தா, துணைத்தலைவர் திரு. சுந்தரேசன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஜூலியட் கேத்தரின் ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் நிகழ்ச்சியின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
