திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு

0

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கை, கால்  பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர்கள் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திட ஆவின் நிறுவனத்தின் வாயிலாக ஆவின் முகவர்களாக தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000ஃ- மானியமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக வழங்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சரால் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்படுத்தும் பொருட்டு சுயதொழில் செய்திடும் வகையில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க ஏதுவாக ஆவின் பாலகத்தில் ஆவின் உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்திட முன்வைப்புத்; தொகையாக  ரூ.25000 மற்றும் பயனாளிக்கு மானியமாக ரூ.25000 என மொத்தம் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில்  பயன்பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1 வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி-1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ  31.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் : 0431-2412590  தொடர்பு  கொண்டு பயன்பெறலாம்

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.