தன் உடலை தானமாக தந்த முதல்ஆயர்

0
1

 

தான் வாழ்ந்த காலம் முதல் இறப்பு வரை மக்களுக்காக அயராது உழைத்த ஆயர் (எமரிட்டஸ்) முனைவர் B. P. அந்தோனி டிவோட்டா ( வயது 77) அவர்கள்(15 – 10 – 19) இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள்.

 

2

அவர் 30 – 6 – 1943 – ல் தூத்துக்குடியில் பிறந்தார்.27 – 8 – 1971 – ல் குருவானவராக வார்த்தைப்பாடு பெற்றார். 28 – 1 – 2001 – ல் திருச்சி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். தனது பணிக்காலத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக பெரும் பங்காற்றினார். திருச்சி திருச்சபை வலுப் பெறுவதற்கு அதிக முயற்சிகள் எடுத்தார். இவரின் காலகட்டத்தில்தான் புதிய பேராலயமானது கட்டப்பட்டது.  St.ஜேம்ஸ் என்னும் கல்வி நிறுவனத்தை நிறுவிய பங்கு இவருக்கு உண்டு. இன்னும் பல முயற்சிகள் கிறிஸ்தவர்களின் நலனுக்காக எடுத்தார்.

ஆயரின் நல்லடக்க திருப்பலி நாளை (16-10-19) 10 மணிக்கு திருச்சி கத்தீட்ரல் ஆலயத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பலிக்கு பின்னர் அவர் உடல் பெங்களுரு St. John மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் (அவர் விருப்பப்படி) படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் /மாணவிகள் உடலை பகுப்பாய்வு செய்து படிப்பிற்கு உதவும் வகைக்காக ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவருடைய கண்களும் இறந்த சில மணிநேரங்களுக்குள் திருச்சி St. Joseph மருத்துவமனைக்கு கண்தானம் செய்யப்பட்டுவிட்டது.

நமது கத்தோலிக்க திருச்சபைக்கே வழிகாட்டியாக விளங்கும் இச்செயல்களால் இவர் இறைவனின் வீட்டில் இளைப்பாறுதல் பெறுவது உறுதி.

இச்செயல்களின் நிமித்தமாக மனிதம் இவரில் வாழ்ந்துள்ளது நமக்கெல்லாம் ஒரு படிப்பினை.

மண்ணில் உடல் புதையுண்டு இல்லாமல் போவதைக்காட்டிலும் பலருக்கு பயன்பட்டு அவர்களின் இதயங்களில் புதையுண்டு இருப்பது மேல் என நினைத்த ஆயர் அவர்களின் ஆன்மா நித்திய சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இறைவா உம் அடியார் இவரை விண்ணகவீட்டில் ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறோம்.

இறைவனுக்கு நன்றி

3

Leave A Reply

Your email address will not be published.