தனியார் ரயில்கள் திட்டத்திற்காக தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் கண்டனம்

தனியார் ரயில்கள் திட்டத்திற்காக தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் கண்டனம்
தினசரி ஓடும் 13000 ரயில்களில் அதிகம் லாபம் தரும் 150 முக்கிய ரயில்களை தனியார்கள் வசம் ஒப்படைத்துசுமார் ரூ 20 ஆயிரம் கோடி நிதி திரட்ட ரயில்வே அமைச்சகம்திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான ஒப்பந்த சரத்துகளில் கண்காணிப்பு, கட்டண நிர்ணயம்,ரயில்கள் நேரம்,மத்தியஸ்தம் போன்ற பல அம்சங்களுடன் அதனை கையாளும்அதிகாரக்குழு விவரங்களையும் இணைக்க வேண்டும். இந்த குழு அமைக்ககடந்த 2017ஏப்ரல் 5 ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்து, அதே ஆண்டு மே 8 ம் தேதி அரசாணை வெளியிட்டு விட்டது. இந்த குழுதான் ரயில் வளர்ச்சி ஆணையம் என்றுஅழைக்கப்படுகிறது.
ரயில் கட்டண நிர்ணயம் மற்றும் முதலீட்டாளர்கள் ரயில்வேக்கு செலுத்த வேண்டிய தண்டவாள மதிப்பீடு கட்டணம் தீர்மாணிக்க ஒரு “போக்குவரத்து உருப்பினர்”, ஒப்பந்த சலுகை,முதலீட்டாளர் மூலதனம் தொடர்பான தாவாக்கள் தீர்க்க ஒரு “பொது தனியார் பங்களிப்ப்புஉறுப்பினர்”, தரம், சேவை கண்காணிக்க ஒரு “திறமை தரம் மற்றும் அளவுகோல் உறுப்பினர்”, இது தவிர ஒருதலைவர்இந்த ஆணையத்தில்இடம் பெறுவார்.

சமூக தேவைகளுக்கான மூத்த குடிமக்கள், உடல் ஊணமுற்றோர், நோயாளிகள் சலுகைகள், புறநகர் ரயில்கள், மூங்கில், காகிதம், பழங்கள் போன்ற சில சரக்குகளுக்கான மான்யம் தொடர்பான கொள்கை வரையறுக்கும்அதிகாரம் இந்த ஆணையத்திற்கு உண்டு. முதலீட்டாளர்கள் இடையேயும், முதலீட்டாளர்கள் மற்றும் ரயில்வே இடையேயும் இது மத்தியஸ்தராக செயல்படும். மேலும்தரமான சேவைகளை உறுதிப்படுத்தி உபயோகிப்பாளர்கள் நலன்கள் பாதுகாப்பதும்,ரயில் இயக்குனர்கள் இடையே போட்டி,தகுதி, பொருளாதாரம் மேம்படுத்துவதும்ஆணையத்தின் நோக்கம் என்று அரசாணை கூறகிறது.
உயர் மட்ட செயலாளர்கள் அடங்கிய தேர்வுகுழுஇந்த ஆணையத்திற்கு உருப்பினர்களை தேர்வு செய்துஅரசுக்கு பரிந்துரைக்கும்.அந்த தேர்வுத் குழுவில் கேபினட் செயலாளர், ரயில்வே வாரிய சேர்மன்,மற்றும் மத்திய அரசின் ஏதாவது ஒரு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் இடம்பெறுவார்.நிதி அயோக் தலைவர் வேண்டுகோள்படிசெயலாளர்கள் மட்ட குழு உருவாக்கப்பட்டு இருப்பதாக வெளிவரும்செய்திகள்ரயில் வளர்ச்சி ஆணையம்கட்டமைக்கபட இருப்பதை உறுதிப் படுத்துகின்றன.
இந்த ஆணையம் வசம் பயண கட்டண நிர்ணய அதிகாரம் கைமாறும்.நடப்பு பயணச் சலுகைகள் ஆய்வுக்கு உள்ளாகும். அரசு ரயில்களை விட தனியார் ரயில்கள் இயக்க நேரங்களில் முன்னுரிமை பெரும். தனியார் ரயில்கள் திட்டத்திற்காக ரயில் வளர்ச்சி ஆணையம் கட்டமைக்கப்படுகிறது. இதை தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் ஏதிர்க்கிறது
