மழைநீர்சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம்

0
gif 1

மழைநீர்சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு, துண்டுபிரசுரம் ஆணையர் இரவிச்சந்திரன் வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களில் , போர்கால அடிப்படையில் மழைநீர்சேகரிப்பு அமைப்பை,  ஒவ்வொருவரும் தங்கள் கட்டிடங்களிலும், வீடுகளிலும் நிறுவ வேண்டும் என்று   மாநகராட்சி சார்பில்  வலியுறுத்தப்பட்டு வருகிறது”

gif 4

அதன் தொடர்ச்சியாக  அரியமங்கலம் கோட்டம் ஆண்டாள் நகர் பூங்காவில் அப்பகுதி பொதுமக்களுக்கு ஆணையர் இரவிச்சந்திரன் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைப்பதன் முக்கியதுவத்தையும்,  மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் தீவிரபடுத்ததும் விதமாக பொதுமக்களிடையே  வலியுறுத்தி துண்டுபிரசுரம் வழங்கி தெரிவித்ததாவது,  பொதுமக்கள் பருவமழை தொடங்கும் முன் மழைநீர் கட்டமைப்புகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்யவும் , இல்லாத கட்டிடங்களில் உடனடியாக அமைக்கவும்,  மேலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் , வணிக கட்டிடங்களில் உருவாக்குவதன்  மூலமாக நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என்றும்,  எதிர் வரும் பருவமழையால் கிடைக்கும் மழைநீரை சேகரிக்க முடியும் என்று எடுத்துரைத்தார்.

gif 3

முன்னதாக எம்.ஜி.ஆர்.நகர் பகுதி, ஆண்டாள் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தியதை சரியான முறையில் உள்ளத என பொறியாளர்களுடன்  பார்வையிட்டு  அமைக்காத வீடுகளில் உடனடியாக அமைக்க உத்தரவிட்டார்.

 

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.