திருச்சி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

0
Full Page

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் .ஆர்.மேல்நிலைப்பள்ளியில்  பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான 47 வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சிவராசு  இன்று(15.10.2019) தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் சொந்தமாக அறிவாற்றலை பயன்படுத்தி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நிலைகளில் அறிவியல் படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள்.  மாணவர்களின் அறிவாற்றலை ஊக்கு விப்பதற்கும், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.  மாணவர்களின் செயல்திறன், அறிவியல் வளாச்சியை பொதுமக்களும் பார்த்து பயன்பெற வேண்டும்.

இந்த ஆண்டு அறிவியல் கண்காட்சிக்குநிலையான வளர்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும்(Science And Technology For Sustainable Development ) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 121 க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  ஆசிரியர்களின் 5 படைப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

வருவாய் மாவட்டத்திலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு பிரிவில் ஒரு மாணவர் ஒரு படைப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பிரிவில் ஒரு மாணவர் ஒரு படைப்பு, 6-10 ஆம் வகுப்பு பிரிவில் 2 மாணவர்கள் ஒரு படைப்பு மற்றும் ஆசிரியர் பிரிவில் ஒரு படைப்பு என 4 படைப்புகள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.  மேலும் கணித கருத்தரங்கில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற படைப்;பு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.  மாவட்ட அளவில் நடைபெறும் இந்த அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள்  மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளனர் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்த அறிவியல் கண்காட்சியில்   மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி  மாவட்ட கல்வி அலுவலர்கள் சின்னராசு, திருச்சி, செல்வி  முசிறி, ராஜலிங்கம்  மணப்பாறை, அறிவழகன்  இலால்குடி,  ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் முனைவர்..வின்சென்ட்டிபால் , மற்றும் பலர் உடன் உள்ளனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.