திருச்சியில் பூட்டியே கிடக்கும் பாலூட்டும் தனிஅறை குழந்தையோடு பரிதவிக்கும் தாய்மார்கள்

0
D1


திருச்சியில் பூட்டியே கிடக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை
கண்டுக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் முக்கிய பேருந்து நிலையமாக விளங்குவது மத்திய பேருந்து நிலையமாகும். இப்பேருந்து நிலையத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு சிரமமின்றி பாலூட்டும் வகையில் தனி அறை செயல்பட்டுவந்தது. சமீபகாலமாக அந்த அறை பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தாதவாறு பூட்டியே காணப்படுகிறது.

D2

N2

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உள்பட்ட பேருந்து நிலையங்களில் தனி அறை திறக்கப்படும் என சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, தமிழக சுகாதாரத் துறை சார்பில் அனைத்து பேருந்து நிலையங்களிலும் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் இருக்கைகள், மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நவீன அறைகள் கட்டப்பட்டன.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலக தாய் பால் வாரத்தை முன்னிட்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
இதேபோல, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை தற்போது பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. போதிய பராமிப்பு இல்லாததால் அறை பூட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பார்த்தால் பல நாட்களாக தூங்கியபடியே இருக்கிறதொளிய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆளுங்கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அமைந்திருக்கும் திருச்சியில் அவர்களுடைய தலைவரால் தொடங்கப்பட்ட திட்டத்தை கண்டுக்கொள்ளாமல் இருப்பது திருச்சி மக்களுக்கு மட்டுமல்லாது மற்ற பகுதியிலிருந்து வரும் மக்களுக்கும் பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்கின்றனர் குழந்தையை வைத்து பால்கொடுக்க சிரமப்படும் தாய்மார்கள்…..

N3

Leave A Reply

Your email address will not be published.